தமிழக செய்திகள்

ஆயுதபூஜை ஸ்பெஷல்: போத்தனூர் - கரக்பூர், கரக்பூர்- சென்னை இடையே சிறப்பு ரெயில்

20 பெட்டிகளை கொண்ட போத்தனூர் - கரக்பூர் சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை,

ஆயுதபூஜையை முன்னிட்டு போத்தனூர் - கரக்பூர், கரக்பூர் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆயுதபூஜை; போத்தனூர் - கரக்பூர் சிறப்பு ரெயில்

போத்தனூரில் இருந்து அக்டோபர் 14-ந் தேதி (நாளை) காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06149) மறுநாள் இரவு 8 மணிக்கு கரக்பூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கரக்பூரில் இருந்து அக்டோபர் 15-ந் தேதி (நாளை மறுநாள்) இரவு 11 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06150) 3-வது நாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

20 பெட்டிகள்; முன்பதிவு தொடங்கிவிட்டது

20 பெட்டிகளை கொண்ட போத்தனூர் - கரக்பூர் சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT