தமிழக செய்திகள்

அழகுமுத்துகோன் நினைவு தினம் - டிடிவி தினகரன் புகழஞ்சலி

ஆங்கிலேயப் படைகளுக்கு அழகுமுத்துகோன் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

அழகுமுத்துகோன் நினைவுதினம்

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய தமிழ் நிலத்தின் மாவீரரும், அடிமைப்பட்டு கிடந்த மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டிய சுதந்திரப் போராட்ட தியாகியுமான அழகுமுத்துகோன் அவர்களின் நினைவுதினம் இன்று..

அஞ்சாமையை அடையாளமாகக் கொண்டு, ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தாய் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய மாவீரர் அழகுமுத்துகோனின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT