மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
விக்கிரமசிங்கபுரம்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 102.35 அடியாக உயர்ந்தது. அந்த அணையின் உச்ச நீர்மட்டம் 143 அடி ஆகும்.