தமிழக செய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது

கும்பகோணம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

.கும்பகோணம்:

பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்

தஞ்ச மாவட்டம் கும்பகோணம் வட்டம், சோழன் மாளிகையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39). இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்றுமுன் தினம் இரவு வீட்டின் அருகில் தனது காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவில் அவரது கார் தீப்பிடித்து எரிவதாக அக்கம், பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

கார் கொழுந்து விட்டு எரிந்தது

இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து விஜயகுமார் வெளியே வந்து பார்த்த போது வாசலில் நிறுத்தியிருந்த தனது கார் கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கார் தீப்பற்றி எரிந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் திரளானோர் குவிந்தனர்.

இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.இருப்பினும் விஜயகுமாரின் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரின் கார் தீப்பிடிக்க காரணம் என்ன?, தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது மர்ம நபர்கள் காருக்கு தீவைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமுகரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து