தமிழக செய்திகள்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 சிறார்களுக்கு ஜாமின்..!

விருதுநகர் பட்டியலின இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கி சிறார் நீதி குழுமம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர்:

இதில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்களை கடந்த மார்ச் 21ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து இவ்வழக்கை சிபிசிஐடி இவ்வழக்கை விசாரித்து வந்தனர்.

இவ்வழக்கில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் ஏப்.18 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விருதுநகர் பட்டியலின இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் நான்கு சிறார்களுக்கும் சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே நேற்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு