தமிழக செய்திகள்

பேக்கரி கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பேக்கரி கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டா.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் மகன் ஜெகன் (வயது 27). இவர் காணையில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாக்யலட்சுமி என்ற பெண்ணுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெகன் கடந்த 4 மாதங்களாக அகரம்சித்தாமூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து வந்தார். நேற்று முன்தினம் ஜெகன், குடிபோதையில் மனைவியுடன் சண்டையிட்டு தளவானூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் மனவேதனையில் இருந்த ஜெகன், மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஜெகன் இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்