தமிழக செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்

பாலம் பராமரிப்பு பணியால் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை - பெரிநாடு இடையே ரெயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ரெயில் போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 28-ந் தேதி புறப்படும் பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06792) காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதுபோல், 25-ந் தேதி புறப்படும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06127), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை