தமிழக செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை - வனத்துறை

வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர், 

விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வரவேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்