தமிழக செய்திகள்

தமிழக கோவில்களில் புதிதாக அர்ச்சகர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மனு

தமிழக கோவில்களில் புதிதாக அர்ச்சகர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மனுவில் கோரியுள்ளார்.

தினத்தந்தி

சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இது மதஉரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த ரிட் மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், தமிழகத்தில் கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கவும், ஏற்கனவே உள்ள அர்ச்சகர்களை பணிநீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.

ரிட் மனு தொடர்பான விசாரணை தேதியை விரைவில் தெரிவிக்கிறேன் என சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்