தமிழக செய்திகள்

கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி; 7 பேர் கைது

கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை கொரட்டூர் அடுத்த மாதனங்குப்பம் பகுதியில் நேற்று அதிகாலையில் வாலிபர்கள் சிலர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக கொரட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது 24), அமர்நாத் (21), சுதர்சன் (20), ஸ்ரீகாந்த் (20), ரஞ்சித் (22), யோவான் (26) மற்றும் புழல் பகுதியை சேர்ந்த சிவகுரு (26) என்பது தெரிய வந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது