கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்காளதேச பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை - வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்காளதேச பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

வங்காளதேசம் தாகூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்கான் (39 வயது) என்ற பெண் 16 வயதுடைய வங்காளதேச சிறுமியை வீட்டு வேலைக்காக வேலூருக்கு கடந்த 2018-ம் ஆண்டு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுமியை விடுதியில் தங்க வைத்து அவரை விபசாரத்தில் முஸ்கான் ஈடுபடுத்தி உள்ளார்.

ஒருநாள் விடுதியில் இருந்து தப்பி வெளியே வந்த சிறுமியை, வேலூர்- ஆற்காடு சாலையில் முஸ்கான் பிடித்து தாக்கினார். இதைப்பார்த்த பொதுமக்கள் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்கானை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறையில் இருந்து முஸ்கானை போலீசார் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் முஸ்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து