தமிழக செய்திகள்

35 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு முடக்கம்

நாகை மாவட்டத்தில் 35 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் நாகை மாவட்டத்தில் 35 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மீதமுள்ள 9 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு விரைவில் முடக்கம் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து