தமிழக செய்திகள்

மீனவப்பெண்களுக்கு வங்கி கடன் வசதி - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மீனவப்பெண்களுக்கு வங்கி கடன் வசதி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மீனவப்பெண்களுக்கு வங்கி கடன் வசதி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், மீன் வியாபாரம் செய்யும் மீனவப்பெண்களுக்கு ரூ.33 ஆயிரமும், கருவாடு வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.35 ஆயிரமும், இருசக்கர வாகனத்தில் குளிர்சாதனப்பெட்டியை வைத்து மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரமும், வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கடன்பெறும் பயனாளிகள் ஒரு ஆண்டுக்குள் அவர்கள் வாங்கிய கடனை செலுத்தினால் 4 சதவீதம் வட்டியும், ஒரு வருடத்திற்கு மேல் கடன் தொகையை செலுத்தினால் 7 சதவீத வட்டியும் செலுத்த வேண்டும். இந்த கடன் திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் சென்னை மாவட்ட மீனவ மக்கள், இதற்கான விண்ணப்பங்களை ராயபுரத்தில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கடன் விண்ணப்பத்தை பெறுவதற்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம். இந்த கடனை பெற்றுத்தருவதாக இடைத்தரகர்கள் யாராவது அணுகினால், அவர்களைப் பற்றிய தகவலை 9384824245 அல்லது 9384824340 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கவும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு