தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விசைப்படகு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த வாரம் பருவநிலை காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். கடந்த 6-ந் தேதி முதல் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திடீர் வேலைநிறுத்தம்

ஆனால், விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விசைப்படகு தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து