தமிழக செய்திகள்

அடிப்படை வசதி

திருக்கண்ணபுரம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

திருக்கண்ணபுரம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்சாலை

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி காக்காமங்கலம் கவரத்தெருவில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் 5 ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இந்த 5 குடியிருப்புகளுக்கும் போதிய சாலை வசதி இல்லாததால் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமலும், அருகில் உள்ள வீடுகளுக்கு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகம் வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் குழாய்களை அடைத்து ஊராட்சி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் சுவர் உள்ளது.

மின் இணைப்பு

இதனால் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு அருகில் குடிநீர் குழாய்கள் அமைத்து தராமல் அங்கிருந்து மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் மின்கம்பங்கள் நீண்ட தொலைவில் உள்ளது. அங்கிருந்து கம்பங்கள் அமைத்து வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். ஆனால் தெரு விளக்குகள் போதிய வெளிச்சம் இன்றி குழந்தைகள், முதியவர்கள் இரவில் வெளியில் சென்று வர முடியாத நிலையில் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திருக்கண்ணபுரம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்