தமிழக செய்திகள்

சுஜித்தை ஆழ்துளை கிணறு விழுங்கி ஓராண்டு உருண்டோடி விட்டது: மறுமுறை பிறந்து வா; நாங்கள் காத்திருக்கிறோம் சுஜித் - அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்

தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில் சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை சோக கடலில் மூழ்கச் செய்தது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த ஆண்டு அக்டோபர் கடைசியில் திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில் சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை சோக கடலில் மூழ்கச் செய்தது.

சுஜித்தை ஆழ்துளை கிணறு விழுங்கி ஓராண்டு உருண்டோடி விட்டது. சுஜித் மரணப்போராட்டத்தில் இருந்த போது அம்மா என்றழைத்த கடைசி குரல் காற்றில் கலந்து ஒட்டுமொத்த தேசத்தையும் நடுக்காட்டுப்பட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் உயிரிழந்த ஒர் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில்,

சுஜித்,மீண்டு வருவாய் எனகோடானுகோடி பிரார்த்தனைகளை புறந்தள்ளி புதைந்துபோன கருப்பு நாள் இது. ஊண் உறக்கமின்றி உனக்காக உறுதியோடு காத்திருந்த எங்களை கண்ணீரில் மூழ்க வைத்து நீ மறைந்து போனது. மாளாத சோகமாய் மனதில் இருக்கிறது! மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம் #SujithWilson என பதிவிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு