தமிழக செய்திகள்

கொரோனாவிடம் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும் - சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனாவின் 3-வது அலை பரவாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையாக இருந்த நிலையில், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 25 லட்சத்து 6 ஆயிரத்து 961 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 524 பேர் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 102 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

"தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் தினசரி பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் நபர்கள் கொரோனா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வெளியிடங்களுக்கு செல்லும் போது முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கொரோனாவிடம் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்" என்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு