கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கடற்கரை-தாம்பரம் இரவு ரெயில் இன்று முதல் ரத்து

பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

"பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாக்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது