தமிழக செய்திகள்

கரூர் மாநகராட்சியில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது...!

கரூர் மாநகராட்சியில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது என்று கரூர் மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் பீஸ்ட். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 13-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.

திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்