தமிழக செய்திகள்

"பாயசம் சரி இல்லை" சாம்பாரை கொட்டி திருமண நிச்சயதார்த்த விழாவில் அடிதடி...!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள்,சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தினத்தந்தி

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாகச் சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர்.

அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனைப் பெண் வீட்டார் தட்டி கேட்டு,தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரைப் பெண் வீட்டார் மீது ஊற்றியதாகா கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் கைகலப்பாகி மோதல் ஏற்பட்டதாம் .

இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள்,சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசார் சமாதானம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்