தமிழக செய்திகள்

அழகு நிலையம், சலூன்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு உத்தரவு

அழகு நிலையம், சலூன்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில் சில கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டு இருந்தது. தற்போது அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து அரசு உத்தரவிடுகிறது.

இந்த மாற்றங்கள் நாளையில் (11-ந் தேதி) இருந்து அமலுக்கு வரும். அதன்படி, கட்டுமானப் பொருட்கள் கடை, எலக்ட்ரிக்கல் கடை, தனிக்கடைகள், சானிட்டரி கடைகள் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணிவரை இயங்கலாம். கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதில் தடைகள் இல்லை.

செல்போன், கம்ப்யூட்டர் ரிப்பேர் கடைகள், வீட்டு உபயோகப் பொருள் கடைகள், மோட்டார் கடைகள், கண் கண்ணாடிக் கடைகள், காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை திறக்கலாம்.

ஆனால் முடி திருத்தகம், சலூன்கள், ஸ்பா, அழகு நிலையங்கள் ஆகியவற்றை திறக்கக் கூடாது. அவை தவிர மற்ற தனிக்கடைகள் ஊரகப் பகுதியில் காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணிவரை திறக்கலாம்.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் பெருங்கடைகள் இயங்கும் வணிக வளாகங்கள், சந்தை வளாகங்கள் தவிர மற்ற தனிக்கடைகளை திறக்க மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்