தமிழக செய்திகள்

படுக்கை வசதி, கழிவறை வசதிகளுடன் பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு

படுக்கை வசதி, கழிவறை வசதி எனப் பல்வேறு வசதிகளுடன் 2,000 பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.#BusFareHike #LuxuryBuses

சென்னை

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் அதிரடி மாற்றங்களைச் செய்வதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கழிப்பறை வசதியுடன் கூடிய 20 பேருந்துகள் மற்றும் 40 சொகுசு பேருந்துகள் உள்ளிட்ட 2,000 பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இணையான அரசு சொகுசுப் பேருந்துகளை வரும் மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசுப் பங்களிப்புடன் வாங்க இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது.

#TNGovt | #LuxuryBuses | #GovtBuses