தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக படகில் ஏற்றிக் கொண்டிருந்த பீடி இலைகளை, கடத்தல் கும்பல் போலீசாரை பார்த்ததும் அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு கிடந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தெடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து