தமிழக செய்திகள்

கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றி அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர் பீலா வெங்கடேசன் - விஜயபாஸ்கர்

பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்., உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் நான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றி, தனது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளினால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்