தமிழக செய்திகள்

நாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்ததால் வாலிபரும் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருமண நிச்சயதார்த்தம்

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கார்த்திக் (வயது 28). இவர் விசேஷங்களுக்கு பந்தல், மின் விளக்கு அமைத்தல் போன்ற தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்து இரு முறை பெண் பார்த்து நிச்சயித்தனர். 2 திருமண ஏற்பாடுகளும் பாதி யில் நின்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மறைமலைநகரை அடுத்துள்ள கிராமம் ஒன்றில் பெண் ஒருவரை பார்த்து சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர்.

தற்கொலை

நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும் அதை ஏற்க மறுத்து பெற்றோர் இந்த திருமண ஏற்பாட்டை செய்திருப்பதாகவும் கூறி கடந்த திங்கட்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் மாலை தனக்கு திருமண ராசி இல்லை என்று நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து அவரது நண்பர்கள் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்