தமிழக செய்திகள்

விழுப்புரம்-மதுரை, எழும்பூர்-புதுச்சேரி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் 17-ந்தேதி முதல் இயக்கம் - தெற்கு ரெயில்வே

விழுப்புரம்-மதுரை, எழும்பூர்-புதுச்சேரி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் 17-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில்கள், வருகிற 17-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் கட்டணத்துடன் பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* விழுப்புரம்-மதுரை-விழுப்புரம் (வண்டி எண்: 06867/06868), அரக்கோணம்-சேலம்-அரக்கோணம் (06087/06088), சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் (06115/06116), புனலூர்-குருவாயூர்-புனலூர் (06327/06328) இடையே முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள், வருகிற 17-ந்தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணத்துடன் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்