ஆண்டிப்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை மற்றும் ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று இந்துசமய அறநிலையத்துறையின் பெரியகுளம் சரக ஆய்வாளர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் ஹரிஷ்குமார், ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் பொன் சந்திரகலா ஆகியோர் முன்னிலையில் போடி கலைக்குழு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
இதனை கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பின்னர் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த 12 மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.