தமிழக செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியை எட்டியது

பவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியை எட்டியது.

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 98 அடியை எட்டியது.

அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கன மழை பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.எந்த நேரத்திலும் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்ற நிலை ஏற்பட்டதால் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

98 அடியை எட்டியது

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 182 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.