தமிழக செய்திகள்

சுகாதார நிலையம் அமைக்க பூமிபூஜை

சுகாதார நிலையம் அமைக்க பூமிபூஜை செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தில் இருந்த சேதமடைந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட ரூ.41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொங்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாயில்பட்டி வட்டார மருத்துவர் செந்தட்டி காளை முன்னிலை வகித்தார். இதில் சுகாதார துறை துணை இயக்குனரின் உதவியாளர் சீனிவாசன், வெம்பக்கோட்டை ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் சுந்தர், கொங்கன்குளம் ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி, செவிலியர்கள் காளீஸ்வரி, முருகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்