சிறுபான்மை நலத்துறை சார்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினர்.
இதில் 322 ஆண்கள், 137 பெண்கள் என உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 459 பேருக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.