தமிழக செய்திகள்

பில்லூர் அணையில் நீர்திறப்பு; பவானி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தற்போது பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் அதிவேகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைத் தொடர்ந்து பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை