தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள்; அப்பலோ மருத்துவமனைக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்பலோ மருத்துவமனைக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. #Jjayalalithaa #Amrutha

சென்னை

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரியும், தனக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய கோரியும் உத்தரவிடுமாறு அம்ருதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அம்ருதா மனு தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரிஅமுருதா தொடர்ந்த வழக்கில் அப்பலோ மருத்துவமனைக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் மருத்துவமனையில் உள்ளதா என பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியதால் வழக்கு மார்ச் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்