கோப்புப் படம் (பிடிஐ) 
தமிழக செய்திகள்

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், பிரபலங்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட் பதிவில் வெளியிட்டு இருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி