சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ரூ.10.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.