தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தினத்தந்தி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பிரியாணி விருந்தை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராசன், சித்ரா சந்திரசேகர், தி.மு.க. நிர்வாகிகள் ரியாஸ், கராமத், நகராட்சி கவுன்சிலர்கள் சந்தோஷ், ஜெயக்குமார், வேலுமணி, பழனி, பரந்தாமன், செந்தில்குமார், மதன்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்