தமிழக செய்திகள்

பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்

திருப்பத்தூரில் பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் நகரில் 16-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் வி.அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.வாசுதேவன் கலந்துகொண்டு மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை, கொரோனா தடுப்பூசி, தூய்மை இந்தியா, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் மற்றும் கையேடுகளை வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வர், நகர தலைவர் சண்முகம், கண்மணி உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை