தமிழக செய்திகள்

தேர்தலை நேர்மையாக நடத்த கோரி பாஜக வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி

தேர்தலை நேர்மையாக நடத்த கோரி பாஜக வேட்பாளர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தினத்தந்தி

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையில், ஆரணி நகராட்சியில் பல வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவு, அதனை தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாகவும் 27-வது வார்டு பாஜக வேட்பாளர் சண்முகம் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி பாஜக வேட்பாளர் சண்முகம் இன்று ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் சக கட்சியினர் தீக்குளிக்க முயன்ற சண்முகத்தை தடுத்து நிறுத்தினர்.

ஆரணி நகராட்சி தேர்தலை முறையாக நடத்த கோரி பாஜக வேட்பாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து