தமிழக செய்திகள்

பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

3 வடகிழக்கு மாவட்டங்களில் பா.ஜ.க.வெற்றி பெற்றதை அந்த கட்சியினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்கள்.

ஜோலார்பேட்டை

3 வடகிழக்கு மாவட்டங்களில் பா.ஜ.க.வெற்றி பெற்றதை அந்த கட்சியினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்கள்.

நாகலாந்து, திரிபுரா மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல் மேகாலயா மாநிலத்திலும் பா.ஜ.கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனை பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பேரூராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் இல.குரு சேவ் தலைமையில் ஒன்றிய தலைவர் சூரியமூர்த்தி முன்னிலையில் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தனர். பின்னர் பஸ் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, மாவட்ட செயலாளர்கள் கவிதா சுரேஷ், கண்மணி, மாவட்ட சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் அக்பர் பாஷா, சிறுபான்மையினர் அணி தலைவர் முபாரக், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமரேசன், பேரூராட்சி தலைவர் பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு பிரிவு செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் நகர தலைவர் பழனி, மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு