தமிழக செய்திகள்

பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

வேலூரில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். இளைஞரணி பொதுச் செயலாளர்கள் கனிஷ்கர், அருண், கிருஷ்ணன், துணை தலைவர் பாலா, செயலாளர்கள் விக்னேஷ், அஜய் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மனோகரன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், வேலூரில் சாலைகளை சரி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலூர் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில், இளைஞரணி மாநில துணை தலைவர் புவனேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், வணிக பிரிவு மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெகன்நாதன், எஸ்.எல்.பாபு, அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...