தமிழக செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் குடிலில் கறி விருந்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பா.ஜ.க., இந்து முன்னணி புகார்

திருத்தணி முருகன் கோவில் குடிலில் கறி விருந்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பா.ஜ.க., இந்து முன்னணி புகார் மனு அளித்தனர்.

தினத்தந்தி

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடிலில் கோவில் கண்காணிப்பாளர்கள் கலைவாணன், வித்தியாசாகர் இருவருக்கும் ஊழியர்கள் கறி விருந்து பரிமாறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் குடில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக கோவில் கண்காணிப்பாளர்கள் கறி, மீன், முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட்டுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் மூலம் சைவ உணவுகளை தவிர வேறு உணவுகளை சாப்பிட கூடாது என சுற்றறிக்கை உள்ளது. கோவில் துணை ஆணையர் விஜயா தவறு செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர்கள் முல்லை ஞானம், ரமேஷ், சுரேஷ், அய்யப்பன், நகரத் தலைவர் சூரி, ஒன்றிய தலைவர் வீரபிரம்மா, அரசு தொடர்பு பிரிவு மில்கா முத்து, முன்னாள் நகர செயலாளர் ரமேஷ், இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்