தமிழக செய்திகள்

'தமிழகத்தில் பா.ஜ.க. பெயர் சொல்லும் அளவிற்கு கூட வாக்குகளை பெற முடியாது' - கே.பாலகிருஷ்ணன்

அண்ணாமலை ஊர், ஊராகச் சென்றாலும் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் முகவரி இருக்காது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பொதுவுடைமைவாதி சிங்காரவேலரின் 78-வது நினைவு நாளையொட்டி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் சிங்காரவேலர் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக சிலர் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் நடத்த வேண்டியுள்ளது. கூட்டணி தொடர்பாக வரும் 12, 13 ஆகிய தேதிகளில் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. பெயர் சொல்லும் அளவிற்கு கூட வாக்குகளை பெற முடியாத நிலை உள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் மாறி, மாறி தமிழகத்திற்கு வந்தாலும், அண்ணாமலை ஊர், ஊராகச் சென்றாலும் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் முகவரி இருக்காது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்