ஆலந்தூர்,
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை என்பதை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.
சேலம் பசுமை பாதை திட்டம் ஒரு நல்ல திட்டம். காடுகளை அழிக்காமல் சேலம் பசுமை பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை போராட்டக்காரர்கள் உணரவேண்டும். இப்போதே அதனை எதிர்த்து பிரசாரம் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல. மக்களுக் கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழக அரசு ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.