அ.தி.மு.க.வின் மக்களவை எம்.பி. மற்றும் துணை சபாநாயகரான தம்பிதுரை செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தமிழக அரசை பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்யும்பொழுது, வாயை மூடி கொண்டு அமைதியாக இருக்க முடியாது. எங்கள் கட்சி பற்றி கருத்து சொல்ல தமிழிசை சவுந்தரராஜனுக்கு யார் உரிமை கொடுத்தது? யார் குறை சொன்னாலும் என்னால் சும்மா இருக்க முடியாது என தம்பிதுரை கூறியுள்ளார்.
நாங்கள் மத்திய அரசுடன் நட்புடன் இருந்தாலும், தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படாததால் மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டுகிறோம். அ.தி.மு.க. செயல்படாத கட்சி, ஊழல் கட்சி என பாரதீய ஜனதா கட்சியினர் சொல்வதை கண்டு நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? என்றும் அவர் கடுமையாக கூறியுள்ளார்.