தமிழக செய்திகள்

அண்ணாமலை கைதை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் சாலை மறியல்234 பேர் கைது

அண்ணாமலை கைதை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்ட 234 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:

பெண்களை தி.மு.க.வினர் இழிவாக பேசி வருவதாக கூறியும், அதனை கண்டித்தும் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று போராட்டம் நடந்தது. தடைய மீறி போராட்டம் நடத்தியதாக பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பேராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் ஜெகநாதன், மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், மாநகர பார்வையாளர்கள் நாகராஜன், அஜித்குமார், கவுன்சிலர்கள் சுனில் அரசு, ரமேஷ், மண்டல தலைவர்கள் வேணுகிருஷ்ணன், ராஜன், சிவசீலன், முரளி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக வடசேரி சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 234 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்