சென்னை,
மராட்டியம், அரியானா சட்டமன்ற பொது தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. 2 மாநிலங்களையும் பா.ஜ.க. மீண்டும் தக்க வைத்துள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.