தமிழக செய்திகள்

தமிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21 ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. இந்த சூழலில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதன்படி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை