சென்னை,
பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கட்டண குறைப்பு என அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அரசின் அறிவிப்பு கண்துடைப்பு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஉள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் போதாது என தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிஉள்ளார்.
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என கூறுவது தவறு.
மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளை திரும்பப்பெறும் நிலையில் தமிழக அரசு செயல்படுகிறது எனவும் தமிழிசை கூறிஉள்ளார்.
மத்திய அரசின் நிதிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.