தமிழக செய்திகள்

4 மாநிலங்களில் பாஜக வெற்றி: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக-வின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நான்கு மாநிலங்களில் பதவியேற்கவுள்ள புதிய முதலமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு