தமிழக செய்திகள்

ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டம் - கவிஞர் வைரமுத்து டுவீட்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று 13ஆவது நாளாக தொடர்ந்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். அதன் படிபாரத் பந்த் எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்பு இன்று நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று 13ஆவது நாளாக தொடர்ந்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன; அதை நீளவிடக்கூடாது. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்