தமிழக செய்திகள்

அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்

தென்னாங்கூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி, இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

.கல்லூரி முதல்வர் கு.வெண்ணிலா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன், இரும்பேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கவுதம் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இருந்து 60 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றனர்.

முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் ரா.மணிமுருகன், மு.எழில்வசந்தன் சா.சுகந்தி, உ.பிரபாகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் அன்புக்கரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.